காஞ்சிபுரம் கோயில் இட்லி

பக்குவம்:

அரிசி, பருப்பு, வெந்தயம் - மூன்றையும் ஒன்றாக 3 மணிநேரம் ஊற வைத்து மணல் திட்டத்துக்கு அரைத்து அத்துடன் மிளகு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து, கட்டி விழாமல் கலந்து வைக்கவும். வட்ட அடுக்கில் வெண்ணெய் தடவி பாதி அளவு ஊற்றி, 40 நிமிடம் வேக வைக்க வேண்டும்.  வீடுகளில் செய்யும் போது சின்னச் சின்ன கிண்ணங்களில் இட்லி பானையில் செய்து பார்க்கலாம். விறகடுப்பில் சமைக்கும்போது அனலானது நன்றாகப் பரவி, நீராவியானது இட்லியை ருசியாக வேக வைக்கும். கேஸில் செய்யும் போது குறைவான அனல்தான் கிடைக்கும். எனவே முடிந்தவரை கேஸ் அடுப்பை தவிர்க்கவும்.