விளையாட்டுத்துறைக்கு விரைவில் நிதி: அமைச்சர் உதயநிதி தகவல்

திருச்சி: விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அமைச்சரிடம் இந்தாண்டு பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுமா? என கேட்டதற்கு, இந்தாண்டு ரூ.25 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இறுதி போட்டிகள் முடிந்தவுடன் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் கையால் வெற்றிக்கோப்பை வழங்கப்படும். விளையாட்டுத்துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பொறுத்திருங்கள். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். தஞ்சாவூரில் ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதுகுறித்தும் ஆய்வுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: