×

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியை இடிக்க முயன்ற 4 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 50 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை செய்து உள்ளனர்.  இந்நிலையில், நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேர் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை  சம்மட்டியால் உடைக்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன்  போலீசார் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

Tags : Venkaivyal reservoir , 4 people arrested for trying to demolish the Venkaivyal reservoir tank
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...