×

புரோ லீக் ஹாக்கி ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி தொடரில் ஜெர்மனியுடன் நேற்று மோதிய இந்தியா 6-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இந்தியா சார்பில் ஜுக்ராஜ் சிங் (20வது நிமிடம்), அபிஷேக் (21’ மற்றும் 50’), செல்வம் கார்த்தி (23’ மற்றும் 45’), ஹர்மன்பிரீத் சிங் (25வது நிமிடம்) கோல் போட்டனர். ஜெர்மனி வீரர்கள் கிராம்புஷ் டாம் 2வது நிமிடத்திலும், பெய்லட் கான்ஸாலோ 22வது நிமிடத்திலும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் கோல் அடித்தனர். ஹெல்விக் மால்டே 30வது நிமிடத்தில் பீல்டு கோல் கோல் போட்டு அசத்தினார். நேற்று முன்தினம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா, நேற்று ஜெர்மனியை வீழ்த்தி அமர்க்களப்படுத்தி உள்ளது. நாளை மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

Tags : India ,Germany , India defeated Germany in Pro League Hockey
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...