×

தொடர்ச்சியாக 16 தொடரில் வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை பயணத்தை தொடர்கிறது.
* பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்காக நடந்த 16 தொடர்களில் இந்தியா 10வது முறையாக தொடரை வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ந்து 4வது டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது.
* இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஷ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்துகொண்டனர்.
* டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 50 விக்கெட் மைல்கல்லை எட்டிய சாதனை இந்திய சுழல் அக்சர் படேல் வசமானது. தனது 12வது டெஸ்டில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
* 12 டெஸ்டில் 50 விக்கெட் மற்றும் 500 ரன் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையும் அக்சருக்கு கிடைத்துள்ளது. அஷ்வினுக்கு (596 ரன், 63 விக்கெட்) பிறகு இந்த சாதனையை படைத்த 2வது இந்திய வீரரும் அக்சர் தான். தென் ஆப்ரிக்காவின் ஆப்ரே பாக்னர் (682 ரன், 52 விக்கெட்), ஆஸி. வீரர் கிரிகோரி (744 ரன், 57 விக்கெட்), இங்கிலாந்தின் இயான் போத்தம் (549 ரன், 70 விக்கெட்), அஷ்வின் வரிசையில் அக்சர் இணைந்துள்ளார்.

Tags : 16 series wins in a row
× RELATED சி ல் லி பா யி ன் ட்…