×

மலாவி, மொசாம்பிக்கில் புயல் தாக்கி 56 பேர் பலி

பிளான்டைர் (மலாவி): மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 56 பேர் பலியாகி விட்டனர். தென்னாப்பிரிக்காவை தாக்கி வரும் பிரெடி புயல் நேற்று மலாவி மற்றும் மொசாம்பிக் பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் இரு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இரு இடத்திலும் 56 பேர் பலியாகி விட்டனர். மலாவியின் வணிக மையமான பிளான்டைரில் மட்டும் குறைந்தது 51 பேர் இறந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. மொசாம்பிக் நாட்டில் 5 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. எனவே இரு நாடுகளிலும் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

Tags : Cyclone ,Malawi ,Mozambique , Cyclone in Malawi, Mozambique kills 56
× RELATED மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை ஒட்டி, 50...