×

அதிக சம்பளம் கோரி இங்கிலாந்து டாக்டர்கள் 3 நாள் ஸ்டிரைக்

லண்டன்: அதிக ஊதியம் கோரி இங்கிலாந்தில்  இளநிலை மருத்துவர்கள் 3 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,401 சம்பளம் வழங்கப்படுகிறது என இங்கிலாந்து மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து 3 நாள் மருத்துவர்கள் ஸ்டிரைக் நேற்று தொடங்கியது. மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்தம் மருத்துவத்துறையில் கடும் பாதிப்பை உருவாக்கும் என தேசிய மருத்துவ சேவை துறை இயக்குனர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்தார்.  


Tags : UK , 3-day strike by UK doctors demanding higher pay
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது