சென்னை: இலங்கை கடற்கடையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.