×

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: இலங்கை கடற்கடையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் தங்களது எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தாலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி  இலங்கை கடற்படை கைது செய்வது வழக்கமாக உள்ளது. தமிழக எல்லைக்குள் அமைதியான முறையில் மீன்பிடிப்பதற்கும் உரிமை மறுப்பது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு 16 மீனவர்கள் மற்றும் படகுகளுடன் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Tamil Nadu ,O. Panneerselvam ,Union External Affairs Ministry , 16 Tamil Nadu fishermen should be released: O. Panneerselvam's letter to the Union External Affairs Ministry
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்