மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

புனே: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நான்கு இடங்களிலும், மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஐஎஸ்ஐஎஸ் (கேபி) ஆதரவாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

புனேவை சேர்ந்த தல்ஹா கான் மற்றும் சியோனியில் உள்ள அக்ரம் கான் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியின் ஓக்லா பகுதியில் காஷ்மீர் தம்பதி (ஜஹான்சாப் சமி வானி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பெய்க்) கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐஎஸ்ஐஎஸ் (கேபி) அமைப்புடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது’ என்றனர்.

Related Stories: