×

ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஆடுவதில் சந்தேகம்: கேகேஆர் அணிக்கு பின்னடைவு

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டரான ஸ்ரேயாஸ் அய்யர் (28) அண்மை காலமாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் கடைசி டெஸ்ட்டில் முதுகுவலி காரணமாக அவர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. ஸ்ரேயாஸ் முதுகில் வலி இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அவர் ஸ்கேன் எடுக்க அனுப்பப்பட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து
வருகிறது.

இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் அவர் அணிக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை நெருங்கும் நிலையில் ஸ்ரேயாஸ் காயத்தில் சிக்கி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Shreyas ,IPL ,KKR , Shreyas doubt to play in IPL series: Setback for KKR
× RELATED அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு