வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மின்கம்பத்தில் ஆபத்தான முறையில் கட்டிய பேனரை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மின்கம்பத்தில் ஆபத்தான முறையில் கட்டப்பட்டுள்ள பேனரை விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முதல் தனியார் அமைப்புகள், பல்வேறு சங்கங்கள், தனி நபர்கள் என, அனைத்து தரப்பினரும் பொது இடங்களில் பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாலையில் பேனர் வைப்பதால் காற்றில் விழுந்து பலர் உயிரிழக்க காரணமாவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனுமதியின்றி பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்கம்பங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேபிள் ஒயர்களில் விளம்பர பலகைகள், ேபனர்கள் கட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் தடையை மீறி சாலைகளில் பேனர் வைத்ததாக இதுவரை 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, சாலையோர மின்கம்பத்தில் ஆபத்தான முறையில் அதிக உயரமுள்ள பேனர் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ெசல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், காற்று அடித்தால் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த பேனரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: