துன்புறுத்தி பிச்சை எடுத்ததாக கூறி வடமாநிலத்தவரிடம் இருந்து ஒட்டகம் பறிமுதல்-மிருகவதை தடுப்பு சங்கம் அதிரடி

தஞ்சாவூர் : துன்புறுத்தி பிச்சை எடுதததாக கூறி வடமாநிலத்தவரிடம் இருந்து ஒட்டகம் பறிமுதல் செய்து தஞ்சாவூர் மிருகவதை தடுப்பு சங்கத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஒரு ஒட்டகத்தை துன்புறுத்தி கடைகள் மற்றும் சாலையில் செல்பவரிடம் பிச்சை எடுப்பதாக மிருகவதை தடுப்பு சங்கத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் சென்ற மிருகவதை தடுப்பு சங்கத்தினர் ஒட்டகத்தை அவரிடம் இருந்து மீட்டனர். மேலும் ஒட்டகம் துன்புறுத்தப்பட்டதா? என்பது குறித்து மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து பாதுகாப்பு மையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.ஒட்டகத்திற்கான உரிய ஆவணத்தை காண்பித்து, அவருடைய ஒட்டகம் தானா? என உறுதியான பிறகு, அவரிடம் வழங்கப்படும் அல்லது மிருகங்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: