×

ஆஸ்கர் விருது வென்ற 'ஆர்.ஆர்.ஆர்', 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்'படக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் (The Elephant Whisperers) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடலும் வென்றுள்ளது. இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் The elephant whisperersஆஸ்கர் விருதை வென்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், The Elephant Whisperers ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை; அனைத்து விருதுக்கும் தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படம் தகுதியானது” என்று கூறியுள்ளார்.

அதே போல, நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று, வரலாறு படைத்துள்ளது நாட்டு நாட்டு பாடல்; இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!,என்றார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,RRR , Oscar, Award, RRR, 'The Elephant Whispers
× RELATED மழையில் சேதமடைந்த சான்றிதழை...