×

'நாட்டு நாட்டு'பாடலுக்கு மேலும் ஒரு மகுடம்: ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் கீரவாணி!!


வாஷிங்டன் :  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம், பல்வேறு மொழிகளில் திரைக்கு வந்தது. இந்த படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலை எழுதியவர் சந்திரபோஸ். இசையமைத்தவர் கீரவாணி. தெலுங்கில் இந்த பாடலை கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் பாடி உள்ளனர். நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்ஷித் அமைத்த நடனம் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. கோல்டன் குளோப் என்பது அமெரிக்காவின் உயர்ந்த விருதாகும். இதேபோல், ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் கீரவாணி.2009ம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்று இருந்தார்.

தெலுங்கில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, தமிழ் ரசிகர்களுக்கு மரகதமணி என்ற பெயரில் அறிமுகம் ஆனவர்.வானமே எல்லை, அழகன் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசைமைத்து இருந்தார் கீரவாணி.ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி ஆகியோரை தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாலச்சந்தர். மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தியிருந்தார் பாலச்சந்தர். வானமே எல்லை படம் கீரவாணியை மரகதமணி என்ற பெயரில் பாலச்சந்தர் அறிமுகம் செய்து இருந்தார்.

Tags : R. Keeravani ,Rakuman , Oscar, USA, Deepika Padukone, Country Country
× RELATED ஏ.ஆர்.ரகுமான் மீது ஆணையரகத்தில் புகார்