×

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸில்: திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது. ஆஸ்கர் விழா மேடையில் இசையமைப்பாளர்கள் கீரவாணி குழுவினர் நாட்டு நாட்டு பாடலை இசைக்க உள்ளனர். சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான  விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸூக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை பெற்றனர்.

Tags : 95-th ,Oscars awarding ,Dolby Theatre ,Los Angeles, USA , The 95th Academy Awards, the highest award in the film world, kicked off at the Dolby Theater in Los Angeles, USA.
× RELATED 94வது ஆஸ்கர் விருது விழா; 6 விருதுகளை...