தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி தீப்பிடித்த கார் சென்னை குடும்பம் தப்பியது

உளுந்தூர்பேட்டை: தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் சென்னை தனியார் நிறுவன மேலாளர் உட்பட குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நிகில் (37). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மனைவி காவியா (28), மகள்கள் சிவகங்கா(3), சிவாத்மிகா(1) ஆகியோருடன் காரில் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த எ.சாத்தனூர் தனியார் கல்லூரி எதிரே  சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் திடீரென கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.  படுகாயம் அடைந்த நிகில் உள்பட 4 பேரையும் அப்பகுதியின் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் கார் தீ பிடித்து எரிந்ததால் மற்ற வாகனங்கள்மாற்று பாதையில் அனுப்பப்பட்டது.

Related Stories: