×

இலங்கை அரசுடன் பேசி கைதான மீனவர்கள், படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், எல்லை தாண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டுவதும் தொடர் கதையாக உள்ளது. நேற்று இலங்கை கடற்படையினரால் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டும், இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும், அவர்களை பருத்திதுறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர். இது போன்ற விசாரணை முடிந்தவுடன், அவர்களை நாட்டிற்கு உரிய நேரத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், அவர்களை விசாரணை என்ற பெயரால் கைது செய்து பலநாட்கள் சிறையில் வைப்பதால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பிரச்னை முற்றுப்பெறாமல் ஒவ்வொருநாளும் தொடர்வது வேதனைக்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

Tags : Vasan ,Union Government ,Sri Lankan government , Vasan urged the Union Government to release the arrested fishermen and boats in talks with the Sri Lankan government
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...