தேர்வுப்பணியில் ஈடுபட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை: தமிழக தேர்வுத்துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 2 தேர்வு இன்று ெதாடங்குவதை அடுத்து,  தனியார் பள்ளி  ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில்  பயிலும் மாணவர்களுக்கு,   இன்று முதல் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.  தேர்வு மையங்களில் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக  நியமனம் செய்யக் கூடாது. அருகாமையில் 8 கிமீ தொலைவுக்கு மிகாமல் உள்ள  பிற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளின் பணியாற்றும் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக்  கண்காணிப்பாளர்களாக  நியமிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ  எந்த தேர்வு மையத்துக்கும்  கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது.

தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலர்களாக நியமனம் செய்து கொள்ளலாம். ஒரு தேர்வு மையத்துக்கு  நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும்  வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளிகளை சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 500க்கு மேல்  இருப்பின் ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும்  ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு கூடுதல் துணை அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

Related Stories: