பாக்.கில் மனித உரிமை, பேச்சுரிமை மீறல்: அமெரிக்க எம்பி புகார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மனித உரிமை, பேச்சுரிமை தொடர்ந்து மீறப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்க எம்பி தெரிவித்தார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் வெளிநாட்டு விவகாரக் குழுவில் இடம் பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் மூத்த எம்பி பிராட் ஷெர்மன் தனது டிவிட்டரில், ‘’பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகள் கவலை அளிப்பதாக உள்ளது,’’ என்று கூறியுள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்ட தனது வீடியோ பதிவில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் மூத்த தலைவர் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், ‘’ மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும். மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்.  பாகிஸ்தானில் மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. நாட்டில் பேச்சுரிமையை உறுதிபடுத்த அரசு சட்டத்தை பின்பற்ற வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: