புரோ லீக் ஹாக்கி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதிய இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. கடைசி நிமிடம் வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் சிங் 13வது, 14வது, 55வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஹாட்ரிக் கோல் போட்டி அசத்தினார். ஜுக்ராஜ் சிங் 17வது நிமிடத்திலும் (பெனால்டி ஸ்ட்ரோக்), செல்வம் கார்த்தி 25வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) கோல் போட்டனர். ஆஸி. தரப்பில் ஜோஷுவா (2’), வில்லாட் (42’), பென் (52’), ஸலேவ்ஸ்கி (56’) கோல் அடித்தனர்.

Related Stories: