3வது சுற்றில் ரடுகானு

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு தகுதி பெற்றார். 2வது சுற்றில் போலந்தின் மாக்தா லினெட்டுடன் (31 வயது, 21வது ரேங்க்) மோதிய ரடுகானு (20 வயது, 77வது ரேங்க்) 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 50 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தனது 2வது சுற்றில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெர்னார்டா பெராவை (28 வயது, 43வது ரேங்க்) எளிதில் வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் பவுலா படோசா (ஸ்பெயின்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு, லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), டாரியா கசட்கினா (ரஷ்யா), ஹடாட் மாயா (பிரேசில்), மேரி பவுஸ்கோவா (செக்.) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), பெத்ரா மார்டிச் (குரோஷியா), சாம்சனோவா (ரஷ்யா) ஆகியோர் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர்.

Related Stories: