சென்னை: சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்கள், பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் இப்பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (கன்சல்டன்ட், ஸ்பெஷலிஸ்ட்) அலோபதி மருத்துவர்கள் 55 வயது மிகாமல், 2 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள் மற்றும் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இப்பணிக்கான நேர்காணல் பெங்களூரில் தாஜ் ஜஸ்வந்த்பூர் ஓட்டலில் 14ம் தேதி(நாளை) முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். வாட்ஸ் அப் 9566239685, 6379179200. 044-22505886/044-22502267 தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
