ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக - காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி, ‘224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 116 முதல் 122 இடங்களை கைப்பற்றும். 39 முதல் 42 சதவீத வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கும். ஆளும் பாஜகவுக்கு 77 முதல் 83 இடங்கள் கிடைக்கும். 33 முதல் 36 சதவீத வாக்குகளை பாஜக பெறும்.

மதசார்பற்ற ஜனதா தளம் 15 முதல் 18 சதவீத வாக்குகளுடன் 21 முதல் 27 இடங்களை கைப்பற்றும். மற்றவர்கள் 6 முதல் 9 சதவீத வாக்குகளுடன் 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது ஜனவரி 15 முதல் பிப்ரவரி 28ம் வரை சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 30 வாக்குச்சாவடிகளில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கருத்துக்கணிப்பை நடத்திய லோக்பால் அமைப்பு கூறியுள்ளது.

Related Stories: