பயிற்சி வகுப்புக்கு சென்ற இளம்பெண்ணின் தலையை துண்டித்து உடல் பாகங்கள் வீச்சு: காஷ்மீரில் பயங்கரம்

காஷ்மீர்: காஷ்மீரில் பயிற்சி வகுப்புக்கு சென்ற இளம்பெண்ணின் தலையை துண்டித்து உடல் பாகங்களை பல இடங்களில் வீசியெறிந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வீர் அகமது கான் என்பவர் தனது 30 வயது சகோதரி கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அதில், ‘வீட்டில் இருந்து கடந்த 6ம் தேதி பயிற்சி வகுப்புக்குச் சென்ற எனது சகோதரி மாலையில் வீடு திரும்பவில்லை. அன்றுமுதல் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி வந்தனர்.

இவ்வழக்கில் புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி மற்றும் அவரது நண்பர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘மாயமான இளம்பெண்ணை  ஷபீர் அகமது வானி மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி உள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை கொன்று, அவரது தலையை துண்டித்து உடலை துண்டு துண்டாக வெட்டினர். தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை நகரின் வெவ்வெறு பகுதியில் வீசியும், வெவ்வேறு இடங்களில் புதைத்தும் உள்ளனர். தற்போது கொலையான பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. எதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: