×

கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் குமார் (25) என்பவர், கடந்த பிப்ரவரியில் மொராதாபாத்தில் இருந்து ஹாப்பூர் போலீஸ் லைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஹாப்பூர் போலீஸ் லைனில் பணியில் இருக்கும் போது, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஹாபூர் போலீஸ் எஸ்பி அபிஷேக் வர்மா கூறுகையில், ‘கான்ஸ்டபிள் அங்கித் குமார், தனது பாதுகாப்பு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : Constable committed suicide by shooting himself
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...