×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா; திருநின்றவூரில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திருநின்றவூர் நகர திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநின்றவூர் காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதற்கு திருநின்றவூர் நகர செயலாளர் முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் தி.வை.ரவி தலைமை வகித்தார். திருநின்றவூர் நகரமன்ற தலைவர் முன்னிலை உஷாராணி ரவி, ஜெ.அன்பழகன், சி.கமலக்கண்ணன், தெ.நாகராஜ், ரா.பேபி, ஆர்.ரவி, ச.பாபு, சீ.குணசேகரன், சரளா நாகராஜி, பி.எல்.ஆர்.யோகானந்தம், பி.எல்.ஆர்.யோகாதேவி ஆகியோர் வரவேற்று பேசினர்.

இந்த கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500 பேருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில ஆதிதிராவிடர் அணி செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ் சி.ஜெரால்டு, பிரபு கஜேந்திரனன ஆகியோரும் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வெங்கல் சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி தரன், பா.நரேஷ்குமார், பொதுக் குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன். காஞ்சனா சுதாகர், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், தங்கம் முரளி, சன் பிரகாஷ், பொன்.விஜயன்,  நகர கழக நிர்வாகிகள் அன்பழகன், கமலக்கண்ணன், நாகராஜ், ரவி, பாபு, குணசேகரன் தங்கமணி பிரவீன் குமார் நகர்மன்ற உறுப்பினர் கள் தங்கராஜ், சரவணன், ராதா, சந்தோஷ் குமார் ,உஷாராணி, சாந்தி, தேவி, சசிகலா, தி.வை.சுரேஷ்குமார்  ஜெயக்குமார்,  வார்டு செயலாளர்கள் கோட்டீஸ்வரன், அசோக்குமார், ஏகாம்பரம், மோகன கிருஷ்ணன், சலீம், மாதவன் , மகேஷ்குமார், முரளி, பாஸ்கரன், செந்தில்வேல், ரவிச்சந்திரன், ஜீவானந்தம், தி.தெ.பாபு மற்றும் கப்பல் சுரேஷ், கேட்டரிங் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சலீம் நன்றி கூறினார்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tiruninnavoor ,Minister ,Aavadi ,CM Nasar , Chief Minister M. K. Stalin's birthday party; Welfare assistance in Tiruninnavoor: Minister Aavadi CM Nasar provided
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்