×

பார்டர்-கவாஸ்கர் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தல்...!

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது.

இந்திய அணி தற்போதிய நிலவரப்படி 5 விக்கெட் இழப்பிற்கு 472 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். 241 பந்துகளில் விராட் கோலி 100 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு விராட் கோலி தனது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

அதன் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து விராட் கோலி இன்று டெஸ்ட் சதம் விளாசியுள்ளார். இது கோலியின் 28-வது டெஸ்ட் சதமாகும். இந்த சதத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான போட்டிகளில் மொத்தம் 75 சதத்தை விராட் கோலி குவித்துள்ளார்.

Tags : Border ,Kavaskar Cup ,Wirat Kohli ,Australia , Border-Gavaskar Trophy: Virat Kohli scores amazing century in 4th Test against Australia...!
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...