×

பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றது. இதனையொட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை திங்கள்கிழமை (13.03.2023) பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இத்தேர்வில் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வுகளின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Bambaka ,President ,Annpurani Ramadas , Bamaka President Anbumani Ramadoss congratulates the Plus 2 students who will write the public examination!
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...