ஆந்திரா மாநிலம் நகரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சென்னை: ஆந்திரா மாநிலம் நகரி அருகே தர்மபுரம் பகுதியில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பொது ஏற்பட்ட விபத்தில் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பதி சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள புத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது ஆயில் டேங்கர் லாரி மீது கார் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கியது. இதில் காரில் பயணித்த 3 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகரி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: