தாயார் நினைவாக மோடியின் இணையதளத்தில் சிறப்பு பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நினைவாக இணைய தளத்தில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிச. 30ம் தேதி 100 வது வயதில் காலமானார். ஹீராபென் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி ஹீராபென்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தன்னுடைய  அதிகாரப்பூர்வ இணையதளமான ‘நரேந்திரமோடி டாட் இன்’ ல் ‘மா’ என்ற சிறப்பு பிரிவை துவக்கி உள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ தாய்மையின் சிறப்புகளை விவரிக்கும் விதமாகவும் ஹீராபென்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ஒரு தாய்க்கும் அவரது மகனுக்கும் இடையிலான பாச பிணைப்பை விளக்கும் விதமாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர். இதில் ஹீராபென் தன்னுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடங்கள் மற்றும் பல்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறு வயது முதல் இறக்கும் வரையிலான அவரது வாழ்க்கை நான்கு பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories: