மாநிலங்களவையில் காங்கிரஸ் துணை தலைவர், கொறடா நியமனம்

புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவராக பிரமோத் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ஆனந்த் சர்மா சமீபத்தில் ஓய்வு பெற்றார். மாநிலங்களவை கொறடாவாக இருந்த ராஜிவ் சதாவ் மரணமடைந்தார். இதையடுத்து  மாநிலங்களவை துணை தலைவராக பிரமோத் திவாரி, கொறடாவாக ரஜனி பாட்டீல் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்துள்ளார். புதிய நியமனங்கள் தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது. 3 முறையாக எம்பியாக உள்ள பிரமோத் திவாரி உபியை சேர்ந்தவர். இரண்டு முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டீல் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

Related Stories: