திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி திருவொற்றியூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் சங்கரன் தலைமையில், செயற்பொறியாளர் ஆனந்தராவ், உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் மற்றும் முகப்புகள் ஆகியவற்றை பொக்லைன் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

Related Stories: