இலங்கைக்கு கடத்திய ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டிலிருந்து கடத்தி சென்ற ரூ.4 கோடி கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் பகுதிக்கு படகில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை கமாண்டர் உத்தரவுப்படி, கடற்படையினர் யாழ்ப்பாணம் மதகல் கடலோர பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் கிடந்த நான்கு சாக்கு மூட்டைகளை கைப்பற்றினர். அவற்றில் 55 பார்சல்களில் 126.800 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.4 கோடியாகும். இலங்கையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: