திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 22-ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவைக்கு பின்னர் உற்சவர் சிலைக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்பட உள்ளது. அதன்பின், புத்தாண்டு பஞ்சாங்கம் படிக்கப்பட உள்ளது. கருடாழ்வார் சன்னதி அருகே ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்ய உள்ளனர். உகாதி தினத்தை முன்னிட்டு 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.