தச்சர், கொல்லர், கொத்தனார், சிற்பிகள் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: தச்சர், கொல்லர், கொத்தனார், சிற்பிகள் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளை பெறுவதற்காக 12 இணையவழி கருத்தரங்கரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் நேற்று நடைபெற்ற 12வது மற்றும் கடைசி கருத்தரங்கில் ‘பிரதமரின் கைவினை கலைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டம்‘ குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “  நாட்டிலுள்ள தச்சர்கள், கொல்லர்கள், கொத்தனார்கள், சிற்பிகள் உள்ளிட்டோர் ஆண்டாண்டு காலங்களாக புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் ஒதுக்கப்பட்டது. அவர்களை மேம்படுத்தி, அதிகாரமளிப்பதே பிரதமரின் கைவினை கலைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தின் நோக்கம்.  இன்றைய கைவினை கலைஞர்களை நாளைய தொழில்முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் செயலாற்றி வருகிறது.

இவ்வாறு கூறினார்.

Related Stories: