×

பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் குவித்தோவா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். 2வது சுற்றில் அமெரிக்காவின் எலிசபெத் மண்ட்லிக்குடன் (21 வயது, 155வது ரேங்க்) நேற்று மோதிய குவித்தோவா (33 வயது, 15வது ரேங்க்) 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 26 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கிரீஸ் வீராங்கனை  மரியா சாக்கரி (27 வயது, 7வது ரேங்க்)   2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை (30 வயது,  41வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் கோரி காஃப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்), பார்போரா கிரெஜ்சிகோவா, கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), யெலனா ஆஸ்டபெங்கோ (லாத்வியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
சிட்சிபாஸ் வெளியேற்றம்: இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (24 வயது, 3வது ரேங்க்) 2 மணி 36 நிமிடம் போராடி  6-7 (0-7), 6-4, 6-7 (5-7) என்ற செட்களில் அமெரிக்க வீரர் ஜோர்டன் தாம்ப்சனிடம் (28வயது, 87வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.  முன்னணி வீரர்கள் கேஸ்பர் ரூட் (நார்வே),  மெத்வதேவ் (ரஷ்யா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.




Tags : BNP Paribas ,Open , BNP Paribas Open 3rd Round Qualifiers
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்