×

நாகையில் கச்சா எண்ணெய் கசிவு இனி கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி பகுதியில் குழாயில் கச்சா எண்ணெய் கசிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய் கசிந்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதோடு, அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். கச்சா எண்ணெய் கசிவு சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனைக்கு நிரந்த தீர்வு அதாவது இனிமேல் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க சிபிசில் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். நாகப்பட்டின மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசும் இது போன்ற கச்சா எண்ணெய் கசிவு இனிமேல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Nagai ,GK ,Vasan , Steps should be taken to prevent further crude oil spills in Nagai: GK Vasan urges the government
× RELATED பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3...