×

மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: பிபிசி-க்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காந்திநகர்: பிரதமர் மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து செய்தி நிறுவனமான ‘பிபிசி’ சமீபத்தில் பிரதமர் மோடி  குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த கோத்ரா கலவரம் தொடர்பான   ஆவணப்படத்தை வெளியிட்டது.

இதுதொடர்பான யூடியூப் வீடியோக்கள், டுவிட்டர்  போன்ற சமூக வலைதள பதிவுகளை ஒன்றிய அரசு முடக்கியது. பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடை விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று குஜராத் சட்டப் பேரவையில் பிபிசி நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து பாஜக அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், ‘2002ம் ஆண்டு கோத்ரா கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படமானது, பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ஆவணப்படம் பிரதமர் மோடிக்கு எதிரானது மட்டுமல்ல, நாட்டின் 135 கோடி குடிமக்களுக்கும் எதிரானது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

Tags : Modi ,Gujarat Assembly ,BBC , Modi documentary case: Gujarat assembly passes resolution against BBC
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...