×

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: 30 துறைகளை தனது கையில் வைத்துக் கொண்ட திரிபுரா முதல்வர்

அகர்தலா: திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, உள்துறை, சுகாதாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளை தன்னுடன் வைத்துக் கொண்டார். திரிபுராவில் பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வர் மாணிக் சாஹா மற்றும் எட்டு பேர் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எட்டு அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் மாணிக் சாஹா,  மாநில உள்துறை, சுகாதாரம், பொதுப்பணித்துறை, தகவல் மற்றும் கலாசார  விவகாரங்கள், கல்வி, வனத்துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளை  கவனிப்பார்.

தொழில்கள் மற்றும் வர்த்தகம், பிற பிற்படுத்தப்பட்ட சமூக நலத்துறையை ஒரே பெண் அமைச்சர் சந்தனா சக்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான முந்தைய கூட்டணி அரசில் இடம்பெற்ற நான்கு அமைச்சர்களுக்கு தற்போதைய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Ilaga ,Tripura ,Chief Minister , Allocation of portfolios to ministers: Tripura chief minister who has 30 portfolios in his hands
× RELATED திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ.வை...