×

கோயம்பேட்டில் நாளை சமத்துவ மக்கள் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நாளை கோயம்பேட்டில் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது. சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை கோயம்பேடு, ஓட்டல் சென்னை டீலக்சில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்குகிறார். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர், சிவந்தி ஆதித்தனார், ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, எர்ணாவூர் நாராயணன் மரியாதை செலுத்துகிறார்.

இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட செயலாளர்கள் பதவி பிரமாணம், உறுதிமொழி ஏற்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகர் முக்கிய தீர்மானங்கள் வாசிக்கிறார். தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து வரவேற்புரை நிகழ்த்துகிறார். பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், இளைஞரணி செயலாளர் பிரபு, துணை தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, கொள்கை பரப்பு செயலாளர் முனீஸ்வரன், துணை செயலாளர் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி முன்னிலை வகிக்கின்றனர். மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் நன்றி கூறுகிறார்.
 
ஏற்பாடுகளை தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், இளைஞரணி துணை செயலாளர் பாலசேகர், மாணவரணி துணை செயலாளர்கள் ராஜ்குமார், சோனை யாதவ், மாவட்ட செயலாளர்கள் துரைமாணிக்கம், பாஸ்கர், வில்லியம்ஸ், மதுரை வீரன், ராஜலிங்கம், அருண்குமார், பாலசுப்பிரமணியன், விஜயன், சுபாஷ், ராம், பழனிமுருகன், மகளிரணி நிர்வாகிகள் கல்பனா, குணசுந்தரி, மீனா, ஆனந்தி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.



Tags : Equality People's Association Working Committee ,Coimbatore ,Ernavur Narayanan , Equality People's Association Working Committee, General Committee meeting tomorrow in Coimbatore: Ernavur Narayanan to participate
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்