×

ஆர்சிபி தொடர்ச்சியாக 4வது தோல்வி; தவறுகளை திருத்திக்கொள்வோம்: கேப்டன் மந்தனா பேட்டி

மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 19.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 52 ரன் (39 பந்து) எடுத்தார். உ.பி. பவுலிங்கில், சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய உ.பி. வாரியர்ஸ் 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி 96 (47 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவிகா வைத்யா 36 ரன் எடுத்தனர். அலிசா ஹீலி ஆட்டநாயகி விருது பெற்றார். 3 போட்டியில் உ.பி. 2வது வெற்றியை பெற்றது. ஆர்சிபி 4வது தோல்வியை சந்தித்தது.

இதுபற்றி ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில், நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்கிறோம். இந்த பழியை நானும் சுமப்பேன். இந்த போட்டிக்கு முன் ஓவருக்கு 7-8 ரன் எடுக்க முயற்சிப்போம் என்று பேசினோம். ஆனால் இன்று அது பலிக்கவில்லை. டாப்-ஆர்டர் பேட்டர்களாக, நாங்கள் நன்றாக பேட் செய்ய வேண்டும். ஆட்டத்தில் எங்களை வெல்லக்கூடிய சமநிலையான அணியைப் பெற முயற்சிக்கிறோம். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக, இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். தவறுகளை திருத்திக் கொள்வோம் என நான் எப்போதும் நம்புகிறேன்’’ என்றார். இன்று இரவு 7.30 மணிக்கு டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் 9வது லீக் போட்டியில் குஜராத்-டெல்லி அணிகள் மோதுகின்றன.

Tags : RCB ,Mandhana , RCB lose 4th in a row; Let's right the wrongs: Captain Mandhana interview
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...