×

அத்தியாவசிய மருந்துகள்,மருத்துவசதானங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்:H3N2 வைரஸ் குறித்து மாநிலஅரசுக்கு ஒன்றிய சுகாதாரத்துறைசெயலாளர் கடிதம்

டெல்லி: நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறைசெயலாளர் கடிதம் மூலம் வலிறுத்தியுள்ளார். சில மாநிலங்களில் நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அதனை முறையாக அணுகவும் ஒன்றிய அமைச்சர் அறிவுறுத்தியனார்.

அண்மைக்காலமாக நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாகா பரவி வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில் ஏற்படுவது இயல்பு என்றாலும், இந்தாண்டு பருவநிலை மாறுபாடு, ஒரு அரங்கிற்குள் அதிக மக்கள் ஒன்றுகூடுவது, மக்களின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், இது வேகமாக பரவி அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக H3N2, H1N1, அடினோ வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேஇது தொடர்பான முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பது குறித்து அவர்களுக்கு விழிப்புர்ணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

H1N1, H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் மூத்த குடிமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை தவிர மருத்துவமனைகளில் இந்த நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவசாதனங்கள், ஆக்சிஜன், போதிய மனித வளம் போன்றவை இருப்பது குறித்து ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று குறைந்திருந்தாலும் கூட ஒருசில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்திருப்பது கவலை அளிக்க கூடிய விஷயம் எனவும், எனவே அவற்றை முறையாக அணுகி தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துவது போன்றவற்றை துரிதமாக மேற்கொள்ளவேணுடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Union Health Secretary , Essential Medicines, Medical Devices, H3N2 Virus, Union Health Secretary Letter
× RELATED விலங்குகளிடமிருந்து பரவும் தொற்று...