ராமேஸ்வரத்தில் மீண்டும் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்; போலீஸ், புலனாய்வுத்துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் சேரான் கோட்டை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்களை போலீசார் கைப்பற்றினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கிய தலா 2 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பார் சல்களை துறைமுகம் போ லீசார் கைப்பற்றினர். இதுகுறித்து மீனவர்களிடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்றும்  பத்து கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கின. ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் நேற்றுகாலை கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடலோரம் கிடந்த மூடை ஒன்றை கைப்பற்றினர். மூட்டையில் தலா இரண்டு கிலோ எடையுள்ள பத்து கஞ்சா பார்சல்கள் இருந்தன. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் மீனவர்களிடம் விசாரித்தனர். கடந்த இரண்டு நாட்களில் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் மொத்தம் 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராமேஸ்வரம் துறைமுகம் போலீசார் மற்றும் புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: