என்.எல்.சி.யால் 5 மாவட்ட கிராம மக்களுக்கு பாதிப்பு: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: என்.எல்.சி.யால் 5 மாவட்ட கிராம மக்களுக்கு பாதிப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவில்லை என்றும் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி உள்ளதால் எடுத்துரைக்கவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. என்.எல்.சிக்காக நிலம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். என்.எல்.சி அந்த மாவட்டத்திற்கு வருவதற்கு முன்பு 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் இப்பொழுது 1000 அடிக்கு உள்வாங்கியது. இதனால் அதிக அளவு கடல் நீர் வந்துள்ளது.

என்எல்சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ஏக்கர் இப்பொழுது என்எல்சியிடம் உள்ளது அந்த 10 ஆயிரம் ஏக்கரில் அடுத்த 30 ஆண்டுகள் வரை பழுப்பு நிலக்கரி எடுக்கலாம். என்.எல்.சி நிர்வாகத்தை 2025-க்குள் தனியாரிடம் விற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. சமீபத்தில் என்.எல்.சி பணியில் 297 பேர் ஜூனியர் என்ஜினீயர் என்ற பதவியில் தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் அதில் ஒருவர் நபர் கூட தமிழ் நாட்டை சார்ந்தவர் இல்லை என்று கூறியுள்ளார்.

Related Stories: