×

டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்..!!

டெல்லி: டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் விசாரணை தொடங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை என்பவரை அமலாக்கத்துறையினர் திங்களன்று கைது செய்தனர். அவர் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா மற்றும் பிறருடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘சவுத் குரூப்’ மதுபான கார்டலை பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை  விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் ‘‘மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்து. இந்நிலையில் இன்று விசரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜராகினார். அவர் ஆஜராகியுள்ளதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Tags : Telangana ,Chief Minister ,Kavitha ,Enforcement Directorate ,Delhi government , Prohibition, Policy, Abuse, Complaint, Poetry, Enforcement, Investigation, Ajr
× RELATED மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு...