×

சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்தினரிடன் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை குறித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2020-ல் சகோதரர் ரமேஷை போலீசார் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக மதுரை பேரையூரை சேர்ந்த சந்தோஷ் வழக்கு தொடர்ந்தார். ரமேஷ் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என சந்தோத ஐகோர்ட் கிளையில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஐ.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டர். எதிர்காலத்தில் சந்தேக மரணத்தில் பிரேத பரிசோதனை செய்வது குறித்து பல்வேறு வழிமுறைகளை நீதிபதி உத்தரவுகளாக பிறப்பித்துள்ளார்.

சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்திடம் வழங்க வேண்டும். உறவினர்கள் நீதிமன்றம்  செல்வதாக தெரிவித்தால் உடலை குறைந்தபட்சம் 48 மணி நேரம் பாதுகாக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.


Tags : ICourt Branch , Suspicious death, post mortem report copy, high court Branch order
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...