பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்: டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

டெல்லி: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த பொது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2004-2009 காலகட்டத்தில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூர் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மண்டலங்களில், பீகாரில் உள்ள பாட்னாவில் வசிப்பவர்கள் சிலர், குரூப்-டி பதவிகளில் பணியமர்த்தப்பட்டதாக எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பணி நியமனத்திற்காக, தனிநபர்கள் தாங்களாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ தங்களது நிலத்தை பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும், ஏ.கே. இன்ஃபோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கும் மாற்றிக் கொண்டனர்.

இதில் சுமார் 1,05,292 சதுர அடி பரப்பளவிலான நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள நிலத்தை பிரசாத் குடும்ப உறுப்பினர்கள் அந்த நபர்களிடமிருந்து ஐந்து விற்பனைப் பத்திரங்கள் மற்றும் இரண்டு பரிசுப் பத்திரங்கள் மூலம் கையகப்படுத்தியதாகவும், பெரும்பாலான விற்பனைப் பத்திரங்களில், விற்பனையாளர்களுக்கு பணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பு, தற்போதைய மதிப்பு சுமார் ரூ.4.39 கோடி ஆகும்.

Related Stories: