×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்த பகுதி 3 மாதங்களுக்கு செயல்படாது: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதால் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிமாக செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் பகுதிகள் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், இங்குள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதி வரும் 24ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது.

இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Alandur Metro station , 4-wheeler parking area at Alandur Metro station will be non-functional for 3 months: Administration notice
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்