×

இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு அடுத்த வாரம் 18ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை அன்றயை தினம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Drinking Water Board , Today's Grievance Redressal Meeting Postponed: Water Board Notice
× RELATED புரசைவாக்கத்தில் உள்ள கழிவுநீர்...